கிழக்கில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Trincomalee Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Mar 13, 2025 04:48 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்துள்ளார்.

ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (12) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பல்வேறு கோரிக்கைகளை, தாதியர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டன. பொது விடுமுறை தினங்களுக்கு சேவை கொடுப்பனவு சம்பந்தமாக பிரதம செயலாளரின் அனுமதி இன்னும் கிடைக்காமல் இருப்பது தொடர்பாகவும், 2021 ஆம் ஆண்டில் இருந்து, கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள தாதியர் பரிபாலகர்ளுக்கான (தாதியர் விசேட தரம் பெற்றவர்கள்) நியமனங்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதன்போது தாதியர்சங்கதினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

முக்கிய கோரிக்கைகள்

மேலும், வெளி மாவட்டத்திலிருந்து வருகின்ற தாதியர்களின் சேவையினை தொடர்ச்சியாகவும் திருப்திகரமானதாகவும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான விடுதி வசதிகள் தொடர்பாகவும், சம்பள நிலுவைகள் மற்றும் மேலதிக நேரம் கொடுப்பனவு இன்னும் பூரணப்படுத்தாமல் இருப்பது குறித்தும், தாதியர் சங்கத்தினர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கிழக்கில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு | Nurses Faced Problem In Eastern Need To Be Solve

அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட இருக்கின்ற தாதியர் நியமனத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் தாதியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என்.தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம். கொஸ்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

2000க்கும் அதிகமாக போலி இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் : வெளியான தகவல்

2000க்கும் அதிகமாக போலி இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் : வெளியான தகவல்

மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


 

GalleryGallery