சம்மாந்துரையில் கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்

Sri Lanka Sri Lankan Peoples Sammanthurai
By Rakshana MA Mar 17, 2025 11:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.

இந்நிலையில், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இற்கு அனுப்பப்பட்ட மாதிரியின் படி, 7 பேருக்கும் கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என  அறிவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடியில் 50 மில்லியன் நிதியில் திறக்கப்பட்ட வைத்தியசாலை அலகு

களுவாஞ்சிக்குடியில் 50 மில்லியன் நிதியில் திறக்கப்பட்ட வைத்தியசாலை அலகு

தடுப்பூசி 

இதனைதொடர்ந்து, அப்பிரதேசத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துரையில் கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் | Arv Vaccination For Domestic Dogs Stray Dogs

குறித்த நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாதின் ஆலோசனைக்கமைய மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் ஆகியோர் பங்கேற்று உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக நல்லிணக்கத்திற்காக மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை

சமூக நல்லிணக்கத்திற்காக மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW