அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த ஆண்டு சுற்றுலா இலக்கை எளிதில் அடையக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று முன்தினம்(20) வரை 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சாதகமான காலநிலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
பயணிகளின் வருகை
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை, 641,961 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அந்த எண்ணிக்கை 98,420 ஆகும்.
அத்தோடு, ரஷ்யாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,953 ஆகும்.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து 58,124 பேர் வந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ளனர்.
இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஒரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அந்த எண்ணிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த 19,317 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 1562 பேரும் அடங்குவர். இந்த மாதத்தின் முதல் 16 நாட்களில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஈர்க்கப்படும் இடம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒவ்வொரு வாரமும் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை அனுபவிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபரணையில் உள்ள ஹிரிவடுன்ன கிராமத்திற்கு வருகை தரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தின் பழமையான சூழலால் பல வெளிநாட்டினர் ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்தக் காரணத்திற்காகவே பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஹிரிவடுன்னா கிராமத்திற்கு வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |