வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Department of Meteorology Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Laksi Dec 17, 2024 04:05 AM GMT
Laksi

Laksi

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தற்போது நிலவும் தளம்பல் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

புத்தளத்தில் தொடருந்தின் முன் பாய்ந்து இளம் யுவதி உயிரிழப்பு

புத்தளத்தில் தொடருந்தின் முன் பாய்ந்து இளம் யுவதி உயிரிழப்பு

இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Alert In Sri Lanka

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சஜித் அணியுடன் இணையாது: அப்துல் ரஹ்மான்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சஜித் அணியுடன் இணையாது: அப்துல் ரஹ்மான்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Alert In Sri Lanka

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

அம்பாறை சத்தாதிஸ்ஸ பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி!

அம்பாறை சத்தாதிஸ்ஸ பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW