உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சஜித் அணியுடன் இணையாது: அப்துல் ரஹ்மான்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியுடனோ அல்லது வேறு எந்த அணியுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனித்தே போட்டியிடும் என கட்சியின் தலைவர் எம்.எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்சியின் நிலைப்பாடு குறித்து, திருகோணமலை மாவட்ட, கிண்ணியா பிரதேச செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் விளக்கம் அளிக்கும் கூட்டம் ஒன்று நேற்று (15) கிண்ணியாவில் இடம்பெற்றது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) ஒரு பங்காளி கட்சியாக இருந்தோம். இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தி ஒன்றின் அவசியம் இருந்ததனால், அவர்களோடு, அன்று இணைந்து நாங்கள் பயணித்தோம்.
2020 ஆம் ஆண்டு, பொதுத்தேர்களில் சில புரிந்துணர்வு இன்மையினால், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து, போட்டியிடக் கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த(2024) ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
எங்களுக்கு கிடைத்த தகவல்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து, NPP அல்லாத ஒரு கட்சிக்கு நாங்கள் ஆதரவு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானோம். இதன் காரணமாக சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்தோம்.
அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்(2024) நாங்கள் தனியாக போட்டியிட்டோம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தனியாக போட்டியிட்டு இருந்தோம்.இங்கு கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளில் இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொண்டோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
மாற்றத்தை விரும்பிய மக்கள், தற்போது ஒரு புதிய ஆட்சியை தோற்றுவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இலங்கையின் பாரம்பரிய அரசியல் தற்போது மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
மக்களின் சிந்தனை ஒரு அரசியல் புரட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது என்பதை கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது.
இதனை ஒரு சிந்தனை புரட்சியாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பார்க்கின்றது. கடந்த 18 வருடங்களாக இந்த மாற்றத்துக்காகவே எமது கட்சி உழைத்து வந்திருக்கின்றது என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எங்களுடைய அரசியல் கொள்கையும், மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதே. எனவே, எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எங்களை அங்கீகரிப்பார்கள் என நம்புகிறோம். NFGG க்கு வாக்களிப்பதானது ஒரு அறிவு சார்ந்த சிந்தனையாகும். அதன் பலனை மக்கள் விரைவில் கண்டுகொள்ளக் கூடிய கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
சபாநாயகரின் பதவி விலகல்
புதிய சபாநாயகரின் பதவி விலகல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு குறுகிய காலத்தில், சபாநாயகர் விலகுவதற்கு காரணம், மக்களின் சக்திக்கு முன், நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டமையே.
ஏனெனில், கடந்த கால பிற்போக்கான அரசியல் கலாச்சாரத்தை, மாற்றுவதற்காகவே, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதன் காரணமாக, அரசியல்வாதிகளின் பொறுப்பு கூறலும் வகை கூறலும் மேலோங்கியிருக்கின்றது. எமது கட்சியின் நிலைப்பாடும், ஏமாற்று அரசியலில் இருந்து மக்களை பாதுகாப்பதே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில், கட்சியின் கிண்ணியா பிரதேச செயற்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |