அம்பாறை சத்தாதிஸ்ஸ பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி!

Ampara Sri Lanka Eastern Province Kalmunai Sports
By Rakshana MA Dec 16, 2024 12:34 PM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை சத்தாதிஸ்ஸ பாடசாலையை கடினபந்து கிரிக்கெட் விளையாட்டில், கல்முனை ஸாஹிரா கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

13 வயதுக்குட்பட்ட (under 13) Division ||| கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் அம்பாறை சத்தாதிஸ்ஸ அணிக்கிடையில் உஹன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சத்தாதிஸ்ஸ அணி 42 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

சுற்றுப்போட்டி 

இதனை எதிர்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணியினர் 20 வது ஓவரில் 8 விக்கெட்டினை இழந்து 83 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த சத்தாதிஸ்ஸ அணி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

வெற்றி இலக்கை நோக்கி ஸாஹிரா கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய போது 1 விக்கெட் இழப்பிற்கு 10 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.

அம்பாறை சத்தாதிஸ்ஸ பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி! | Kalmunai Zahira College Beat Ampara School

இதில் கல்முனை ஸாஹிரா அணியில் விளையாடிய இல்ஹாம் உமர் இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அஹ்திர் 23 ஓட்டங்கள், அதீப் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 19 ஓட்டங்களும் பெற்றிருந்தார்கள்.

இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த பாடசாலையின் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எம்.தன்ஸீல், மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிய பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஏ.எம். ஜப்ரான், எம்.யூ.எஸ். ஷம்லி, ஆலோசனை வழங்கிய ஆசிரியர் எம்.ஐ.அமீர் மற்றும் திறமையாக விளையாடிய மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் எம்.ஐ. ஜாபீர் தெரிவித்தார்.

சபாநாயகராகுவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை : சமல் ராஜபக்ச

சபாநாயகராகுவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை : சமல் ராஜபக்ச

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW