நாட்டில் காற்றின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் காற்றின் தரம் 40 – 78 இற்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம்
அத்தோடு, அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நேரங்களாக குறிப்பாகக் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் மாத்திரம் சீரான நிலையில் காற்றின் தரம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |