அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

Sri Lanka Sri Lankan Peoples Lanka Sathosa Wasantha Samarasinghe
By Rakshana MA Dec 08, 2024 10:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

பொருட்களுக்கான தட்டுப்பாடு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பண்டிகை காலங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது பொதுவாக சந்தையினுள் காணப்படும் ஒரு நிலையாகும்.

எனவே அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் | Today Sathosa Things Prices

நாட்டினுள் பொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முயற்சிக்கின்றார்கள்.

நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிப்போம். மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு சந்தையினுள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றிவளைப்புக்கள் : நாடளாவிய ரீதியில் களமிறங்கும் அதிகாரிகள்!

ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றிவளைப்புக்கள் : நாடளாவிய ரீதியில் களமிறங்கும் அதிகாரிகள்!

விலை குறைப்பில் நடவடிக்கை

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் ஊடாக தலையிடுவதற்கு நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் | Today Sathosa Things Prices

குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.

பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW