காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka
Elephant
By Rakshana MA
நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
காட்டு யானை
குறித்த நபர் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே, மேற்படி காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |