டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் : வலுவடையும் இலங்கை ரூபாய்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு வருடத்திற்கு பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.35 ரூபாவாகவும், கொள்வனவு விலை 290.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 333.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 319.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 399.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 208.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 198.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 234.32 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 223.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |