இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

Bandaranaike International Airport Sri Lanka Japan Sri Lanka Relationship Japan Economy of Sri Lanka
By Laksi Oct 02, 2024 06:26 AM GMT
Laksi

Laksi

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ,ஜெயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வேலைத்திட்டங்கள்

ஜெயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதோடு அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் | Japan Aided Developments In Sri Lanka

மேலும், இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் கட்சுஹிரோ சுஷூகி உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW