அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Ampara Children's Day Eastern Province
By Laksi Oct 02, 2024 03:05 AM GMT
Laksi

Laksi

சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்றைய தினம் (01) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடக்கு - கிழக்கில் காணமல் ஆக்கப்பட்ட 1000ற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

சிறுவர்களுக்கு பாதுகாப்பு 

கருத்து தெரிவித்த தம்பிராசா செல்லவராணி, “இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதப்படுவதுடன் கடந்த யுத்த காலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும்.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Struggle Of Missing Relatives In Ampara

உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம். இனிமேல் இந்த சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனும் நோக்கத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக கருதி இலங்கையில் உள்ள 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் இடம்பெறுகிறது” என்றார்.

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery