அக்கரைப்பற்றில் நடந்த துயர சம்பவம்
அக்கரைப்பற்று – பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல் ஓயா ஆற்றில் முதலை ஒன்றின் தாக்குதலில் இருந்து தனது நண்பனை காப்பாற்ற முயன்ற ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ளார்.
படகு ஒன்றை மீட்டெடுக்க ஆற்றின் மறுகரைக்கு நீந்திச் சென்றிருந்த இரண்டு பேரில் ஒருவரை, திடீரென நீரிலிருந்து வெளிப்பட்ட முதலை தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல்
இதையடுத்து, மற்றொரு நபர் கட்டையால் முதலை மீது தாக்கி தனது நண்பனை காப்பாற்றியுள்ளார்.

ஆனால் சில நிமிடங்களில், அந்த முதலை மீண்டும் திரும்பி காப்பாற்ற முயன்ற நபரை தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓலுவில் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஏ.கே.. ரமிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணிக்காக கடற்படை சுழியோடிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் கமகே தெரிவித்துள்ளார்.