ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சாரா ஜஸ்மின் உயிரோடு...! ஆனந்த விஜேபால வெளிப்படுத்திய தகவல்கள்

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka Ananda Wijepala
By Fathima Jan 07, 2026 05:52 AM GMT
Fathima

Fathima

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சாரா ஜஸ்மின் உயிரோடு...! ஆனந்த விஜேபால வெளிப்படுத்திய தகவல்கள் | Minister Ananda Wijepala About Sarah Jasmine

தொடர்ந்து பேசிய அவர், சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.

அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.