ஈரானில் இடம்பெற்ற வன்முறையில் 36 பேர் பலி
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் பொருளாதார சீரழிவு, அதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
துப்பாக்கி சூடு
ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது அரசு தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தினால், அவர்களை மீட்க அமெரிக்கா களமிறங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு, ஈரானின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.