காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! அடுத்த 12 மணித்தியாலம் குறித்து எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்த பிரதேசம் தற்போது ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளளது.
தாழமுக்கம்
இந்த தாழமுக்கம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் (50 - 75) மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மின்னல் தாக்கம்
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.