அநுரவை எச்சரித்த நாமல் ராஜபக்ச!

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Venezuela NPP Government
By Fathima Jan 05, 2026 11:20 AM GMT
Fathima

Fathima

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொட்டு கட்சியின் புது வருடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

பிரச்சினை

தொடர்ந்துரையாற்றிய அவர், அரசாங்கத்தின் அச்சகத்தில் அச்சாகும் புத்தகத்தில் இருக்கும் தவறை அறிய முடியாத அரசாங்கம்.இவர்கள் எப்படி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.

அரசாங்கத்திலுள்ளவர்கள் மதம் மற்றும் சம்பிரதாயங்கள் இல்லாமல் ஏதோ ஒரு வழியில் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

அநுரவை எச்சரித்த நாமல் ராஜபக்ச! | Namal Rajapaksa Anurakumara Issue

வெளிநாடுகளின் தேவைக் கேற்ப அரசாங்கம் கொள்கைகளை தயாரிப்பதென்றால் வெனிசுலாவுக்கு நடந்தது தான் எமது நாட்டுக்கும் நடக்கும்.

கல்வி சீர்திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரபலமானவர்களே நேற்று ஊடகவியலாளர் மாநாடு நடத்தியுள்ளனர்.அவர்களுக்கு தீர்மானம் எடுக்க முடியுமா என எனக்கு தெரியாது.

பிரதமர் கூட பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். பிரதமர் பதவியை ஹரிணிக்கு வழங்கியது இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது.

என்பிபி அரசாகத்தில் உள்ள 159 பேருக்கு மட்டும் வேறான ஒரு சட்டம் செயற்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.