உலகளாவிய பதற்றம்! பயிற்சியில் இறங்கிய போர் கப்பல்கள்
China
Iran
South Africa
Russia
By Fathima
வெனிசுவெலாவில் அமெரிக்காவின் இராணுவ தலையீட்டால் உலகளாவிய பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் போர் கப்பல்கள் தென் ஆப்பிரிக்க கடற்பரப்பில் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க வந்துள்ளன.
முக்கிய கடல் வர்த்தக பாதை
எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் இந்த ஒரு வார பயிற்சி, முக்கிய கடல் வர்த்தக பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடல் தாக்குதல் பயிற்சிகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு மீட்பு நடவடிக்கைகளும் இதில் இடம்பெறும்.
இந்த பயிற்சி அடுத்த வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.