ட்ரம்பிற்கு நன்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர்!

Donald Trump United States of America Pakistan
By Fathima Jan 10, 2026 06:59 AM GMT
Fathima

Fathima

ஒரு கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது,

“பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார்.

அவசர உத்தரவுகள்

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

ட்ரம்பிற்கு நன்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர்! | Pakistani Prime Minister Thanks Trump

போர்களை தடுத்து நிறுத்தியது குறித்து நான் விளம்பரம் செய்துகொள்ள விரும்பவில்லை. அதே சமயம், போரை வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை.

வரலாற்றில் நோபல் பரிசை பெறுவதற்கு என்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என நினைக்கிறேன்.

மக்களுக்கு என்னை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி. நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். அவற்றில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தன.

இந்தியா-பாகிஸ்தான் போல் சில போர்கள் சமீபத்தில் தொடங்கின. அந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நான் அவசர உத்தரவுகள் மூலம் போரை நிறுத்தினேன். கோடிக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றினேன்.'' என கூறியுள்ளார்.