இலங்கைக்கு அருகில் உள்ள தாழமுக்கம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு

Jaffna Trincomalee Northern Province of Sri Lanka Weather
By Fathima Jan 10, 2026 05:19 AM GMT
Fathima

Fathima

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 60 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்த தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 7 மணிக்கு நிலைகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று 

இத்தொகுதி வலுவிழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் இன்று (10.01.2026) நண்பகலளவில் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அருகில் உள்ள தாழமுக்கம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு | Weather Warning For Sri Lanka

வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Gallery