முடிவடைந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லை!
தனியார் துறையினரால் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று(10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த காலக்கெடு முடிவடையும் நிலையில், நாட்டிற்கு மொத்தம் 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் சந்தையில் நாட்டு அரிசி மற்றும் கெகுலு அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி
அத்துடன், கடந்த டிசம்பர் 4ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து, இலங்கை சுங்கத்தால் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை எட்டியுள்ளது.
மேலும், இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசி ஆகியவை அடங்கும் என்று சுங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு அரிசித் தொகுதி நாட்டிற்கு வர உள்ளது.
எனினும், இந்தக் கப்பலை விடுவிக்க சிறப்பு அனுமதி தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |