தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கண்காட்சி
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் தோப்பூர் கல்விக் கோட்ட பாடசாலைகள் இணைந்து நடாத்தும் "சுற்றாடல் சார் பரிசோதனைக் கண்காட்சி" தோப்பூர் - பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு வளாகத்தில் இன்று புதன்கிழமை (22) இடம்பெற்றது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையில் இச்சுற்றாடல் சார் பரிசோதனைக் கண்காட்சி நடைபெற்றது.
சுற்றாடல் சார் கண்காட்சி
இந்த நிகழ்வில் முன்மை அதிதியாக தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.ஏ.ஜப்பார் கலந்து கொண்டு கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கண்காட்சியில் மாணவர்களின் சுற்றாடல் சார் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு செயன்முறையின் மூலம் மாணவர்களால் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களான டீ.எம்.கியாஸ், டீ.இம்தியாஸ், எம்.பௌமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கண்காட்சியை பார்வையிட தோப்பூர் கல்விக் கோட்டப் பிரிவுகளிலுள்ள மாணவர்கள் அனைவரும் வருகை தந்து பார்வையிடுவதுடன், இக்கண்காட்சி நாளை (23) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











