அரிசியின் கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka Rice
By Laksi Oct 22, 2024 12:41 PM GMT
Laksi

Laksi

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் எந்த வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

அரிசியின் விலை

அத்தோடு, நுகர்வுப் பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரிசியின் கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | There Is No Change In The Control Price Of Rice

நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு

பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு

நிதி நெருக்கடி

அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக உத்தரவாத விலைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரிசியின் கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | There Is No Change In The Control Price Of Rice

அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களை பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW