ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

Colombo Government Of Sri Lanka Easter Attack Sri Lanka
By Laksi Oct 22, 2024 09:37 AM GMT
Laksi

Laksi

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம்.ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சிறில் காமினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

சுதந்திரமான அறிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் தலைவராக நியமித்ததன் மூலம் உறவினர்களுக்கிடையே மோதல் உடனடியாக உருவாகும் என்பது தெளிவான உண்மை.

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ | Easter Report Cannot Be Accepted

எனவே, அவ்வாறானவர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பக்கச்சார்பற்ற சுதந்திரமான அறிக்கை என எங்களால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்” என்றார். 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது. 

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் பதிவு

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் பதிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW