பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 22, 2024 05:16 AM GMT

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல்

இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 162 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 277 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு | Parliament Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW