இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் பதிவு

Sri Lanka Money Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker Oct 22, 2024 08:16 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

இந்த வருடத்தில் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (commission to investigate bribery or corruption)  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 81 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை 

கைது செய்யப்பட்டவர்களில் 20 காவல்துறை அதிகாரிகளும், 3 கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 45 அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் பதிவு | 3 045 Corruption Cases In 9 Months

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 22 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் காணப்படுகின்றனர். இதேவேளை, கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 68 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 237 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.