சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

Tourism Saudi Arabia Tourist Visa
By Rakshana MA Apr 07, 2025 08:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஹஜ் பருவத்தை முன்னிட்டு சவுதி அரேபியா (Saudi Arabia), 13 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிகமாக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன் மாத நடுப்பகுதியில் கட்டுப்பாடுகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

நாட்டில் தற்போது நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

13 நாடுகளுக்கு தடை

உம்ரா விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் ஏப்ரல் 13 வரை சவூதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல் | Temporarily Banned Work Visa By Saudi Arabia

இதன்படி,

  1. பாகிஸ்தான் (Pakistan)
  2. இந்தியா (India)
  3. பங்களாதேஷ் (Bangladesh)
  4. எகிப்து (Egypt)
  5. இந்தோனேசியா (Indonesia)
  6. ஈராக் (Iraq)
  7. நைஜீரியா (Nigeria)
  8. ஜோர்டான் (Jordan)
  9. அல்ஜீரியா (Algeria)
  10. சூடான் (Sudan)
  11. எத்தியோப்பியா (Ethiopia)
  12. துனிசியா (Tunisia) 
  13. ஏமன் (Yemen) ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தடை

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இதனடிப்படையில், சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருக்கின்றார்கள். ஆகையால், இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல் | Temporarily Banned Work Visa By Saudi Arabia

அத்துடன், வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வதாகவும் விசா நிபந்தனைகளை மீறுவதுடன் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குவதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

குர்ஆன் ஏன் தப்ஸீருடன் படிக்க வேண்டும்?

குர்ஆன் ஏன் தப்ஸீருடன் படிக்க வேண்டும்?

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW