நாட்டில் தற்போது நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் காணப்படுகின்றது என போக்குவரத்து புகை பரிசோதனை நிதியம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள், சேவைகள் பிரிவு மற்றும் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு
அந்த அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையிலும், கொழும்பு 07, குருணாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
அடுத்த 24 மணிநேரத்தில் காற்றின் தரக் குறியீடு 34 மற்றும் 60 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான நகரங்களில் நல்ல நிலையைக் குறிக்கும்.
அதேவேளை, கொழும்பு 07, யாழ்ப்பாணம், குருணாகல், வவுனியா, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் ஒரு மணி முதல் 2 மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
