10 கோடி பெறுமதியான கையடக்கதொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

Bandaranaike International Airport Batticaloa Dubai Sri Lankan Peoples Crime
By Rakshana MA Apr 05, 2025 06:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான புதிய கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழுவினால் நேற்று(04) இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் முன்னதாக பல மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் என்பதுடன் தற்போது சட்டவிரோதமாக பல்வேறு பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு கடத்தல்காரராக சுங்க அதிகாரிகளால் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

விசாரணை 

துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று காலை 06.30 மணிக்கு வந்திருந்த இவரிடம் காணப்பட்ட 03 சூட்கேஸ்களிலும் 528 கையடக்க தொலைபேசிகள் மட்டுமே கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 கோடி பெறுமதியான கையடக்கதொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது | Kattankudy Man Arrested With Phones Worth Rs 10 Cr

பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசிகளில், ஆப்பிள் ஐபோன்கள், சாம்சுங், கூகிள் பிக்சல்கள் மற்றும் ரெட்மி போன்கள் அடங்கும், அவற்றில் ஒன்று 500,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW