சம்மாந்துறையில் மாணவனை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்

Ampara Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Sammanthurai
By Rakshana MA Nov 14, 2024 10:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறையில் பாடசாலை மாணவனை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவனின் பெற்றோரினால் நேற்று (13) கொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையின் மாணவனை பல முறை தகாத முறைக்கு ஈடுபடுத்திய காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்மாந்துறையில் மாணவனை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல் | Teacher Arrest In Samamanthurai For Abuse Student

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க அனுமதி : ரத்நாயக்க

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க அனுமதி : ரத்நாயக்க

விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, குறித்த பாடசாலை மாணவனை அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறையில் மாணவனை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல் | Teacher Arrest In Samamanthurai For Abuse Student

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் தரம் 4 இல் கல்வி பயிலும் 9 வயதுடைய பாடசாலை மாணவன் தொடர்ச்சியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான ஆசிரியரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 9 வயது பாடசாலை சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் : சுற்றுலா விடுதியாக மாற்ற அரசு நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் : சுற்றுலா விடுதியாக மாற்ற அரசு நடவடிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW