இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

Sri Lanka Sri Lankan Peoples TN Weather Weather
By Rakshana MA Nov 14, 2024 08:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(14) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிரேஸ்ட வானிலை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். ஆகவே பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வாக்களிப்பு நிலையத்தில் பெண் பொறுப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

வாக்களிப்பு நிலையத்தில் பெண் பொறுப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

நாட்டின் பொரும் பகுதியில் மழை

மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதனை தொடர்ந்து சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை | Weather Report For Today Sri Lanka

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை சாத்தியம் உள்ளது.

இதற்கிடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..!

இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..!

கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

மேலும், நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை | Weather Report For Today Sri Lanka

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசலாம் .

அத்துடன் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையும் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு நிலையத்தில் பெண் பொறுப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

வாக்களிப்பு நிலையத்தில் பெண் பொறுப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் இலங்கைக்கு விஜயம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW