ஷாம் நாடும் சிரியா யுத்தமும் : முனாபிக்காக மாறும் சமூகம்
சமகால முஸ்லிம்கள் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த பாதிப்புக்கு பின்னணியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கின்றார்களா? அல்லது மறுமை நாளுக்கு நெருக்கமாக அடையாளங்கள் உள்ளதா? அடையாளங்கள் ஹதீஸ்களில் உள்ளதா? என்பதை சமகால முஸ்லிம்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் அபூ ஹூரைரா(ரழி) அறிவிக்கிறார்கள் : யார் போர் செய்யவில்லையோ? யார் ஜிஹாத் செய்யவில்லையோ? ஜிஹாத்திற்கு கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உடலால் எதுவும் செய்ய முடியாத நிலைமை இருக்கும் நேரம் யார் நம் மனதை அலட்டிக்கொள்ளவில்லையோ? மனதால் போராடவில்லையோ? அவர் முனாபிக்கின் அடையாளத்துடன் மரணித்து விட்டார்கள் என ரஸூல்(ஸல்) அறிவித்தார்கள்.
முனாபிக்கின் அடையாளம்
உலகத்தில் முஸ்லிம் நாடுகளில் நடக்கக்கூடிய யுத்தங்கள் அதனுடைய பாதிப்புக்கள் நாங்கள் முனாபிக்கா இல்லையா என்பது எமக்கான பரிசோதனை ஆகும்.
உலகில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் நேரம் அல்லாஹ்விடம் கையேந்தி அவர்களுக்காக துஆ கேட்கவில்லையென்றால் இந்த பதிவு எம் அனைவரின் உள்ளத்தினையும் அளந்து பார்க்கக்கூடிய நிலையில் உள்ளது.
ஹதீஸ்களில் ஷாம் எனும் வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஷாம் என அழைக்கப்படுவது அன்றைக்கு ஒரு நிலப்பரப்பு இன்றைக்கு நான்கு நாடுகள் அதாவது பலஸ்தீன், ஜோர்தான், லெபனான், சிரியா மற்றும் துருக்கியில் ஒரு பகுதி ஆகும்.
சிரியா கொஞ்சம் பெரிய நிலப்பரப்பு. தற்போது யுத்தம ் நடப்பது அலப்போ. ரஸூல்(ஸல்) அவர்கள் மறுமை நாளை ஒட்டிச்சொன்ன அனைத்து மறுமை அடையாளங்களும் இந்த ஷாம் என்ற நிலப்பரப்பில் தான் நடக்கப்போகின்றது.
இதில் முஸ்லிம்களாகிய நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்.
கஃபதுல்லாஹ் மீது யாரும் கை வைத்தால் எவ்வாறு கொதித்தெழுவோம். அல்லாஹ்வின் ஆலையம் என்றால் எந்த பேதமும் பார்க்கமாட்டோம். மதீனாவும் அவ்வாறே புனிதமானது.
நமக்கு மூன்று பள்ளிவாயல்கள் புனிதமானது பைதுல்லாஹ்(கஃபதுல்லாஹ்), மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா -இது காணப்படுவது ஷாம் ஆகவே முஸ்லிம் ஆகிய எங்களுக்கு மூன்றாவது புனிதமான இடமாக இது காணப்படுகின்றது.
அல்லாஹ் அருள் செய்த பூமி
திருக்குர்ஆனில் நேரடியாக பரகத் செய்யப்பட் நாடு என அல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளான். நபி(ஸல்) அவர்களின் இஸ்ராஹ் பயணத்தில் (கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்ற பயணம்) குறிப்பிட்டுள்ளான். இதில் வேறு எந்த நாடுகளுக்கும் இப்படி குறிப்பிட்டுக் கூறப்படவில்லை.
கிறிஸ்தவர்களின் கைவசம் ஷாம் இருந்த போதிலும் எங்களுடைய ஷாம் இற்கு பரகத் செய் என்று ரஸூலுல்லாஹ் துஆ கேட்டார்கள்.
துருக்கி மக்களினால் துருக்கியின் பிடியை இஸ்லாத்தின் பக்கம் எடுக்கவும் துஆ கேட்குமாறு வினவப்பட்ட போதும், மூன்று முறையும் ஷாம் இற்கு ரஸூலுல்லாஹ் துஆ கேட்டார்கள்.
இதனடிப்படையில் சமகால முஸ்லிம்கள் இது தொடர்பான முழு அறிவினையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலைப்பாட்டிலுள்ளோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |