மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் கைது: 50 இலட்சம் ரூபா அழகுசாதனங்கள் கைப்பற்றல்!
மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை
சந்தேக நபர் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே விமான நிலைய அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனையின் போது சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து அழகுசாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |