அர்ச்சுனா மீதான தாக்குதல் தாக்குதல் : சுஜித் மறுப்பு!
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா (Sujith Sanjaya Perera) தெரிவித்துள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டு
அர்ச்சுனா குற்றச்சாட்டு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேசுமாறு தன்னை நிர்ப்பந்தித்திருந்த போது தான் அங்கு சென்ற வேளை சுஜித் என்பவர் தன்னைத் தாக்கியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் தன் தந்தையின் வயதையுடையவர் என்றும் இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும் என்றும் அர்ச்சுனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |