பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி
அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்(MA.Sumanthiran) உறுதியளித்துள்ளார்.
பெரியநீலாவணை பகுதியில் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு
இந்நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த பகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு
இருப்பினும், சில மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபானசாலையினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மதுபானசாலை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றினை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக சுமந்திரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





