கேள்விக்குறியாகும் மின் உற்பத்தி திட்டங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Champika Ranawaka Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices National People's Power - NPP
By Rakshana MA Feb 16, 2025 07:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்காலத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களின் நிலைமை கேள்விக்குறியே என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இவற்றை முற்றாக இல்லாமலாக்குவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவை அனைத்தையும் சீர் குலைக்கும் வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்காகவே இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் பலரை உள்ளடக்கி இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

நியமிக்கப்பட்டுள்ள குழு 

கடந்த காலங்களில் எம்மால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களே இன்று நாட்டில் பிரதான மின்னுற்பத்தி மூலங்களாகவுள்ளன.

நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் மின் உற்பத்தி திட்டங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Power Generation Projects In Sri Lanka

மீண்டும் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படுவதற்கு முதல் நாள், அதாவது கடந்த 7ஆம் திகதி இலங்கை மின்சாரசபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை, சூரிய மற்றும் நீர் மின்னுற்பத்திகளை வரையறுப்பது தொடர்பிலேயே அந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம்! பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலை மாற்றம்! பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோசடி மிக்க கொடுக்கல் வாங்கல்

எந்தவொரு முதலீட்டாளருக்கும் போட்டித்தன்மை இன்றி வலுசக்தி துறையில் அதிகாரத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது.

அண்மையில் கூட விலைமனு கோரலின்றி நிறுவனமொன்றுக்கு 50 மொகாவோல்ட் காற்றாலை திட்டம் வழங்கப்பட்டது. இது முற்று முழுதாக விலைமனு கோரல் முறைமையை மீறிய மோசடி மிக்க கொடுக்கல் வாங்கலாகும்.

கேள்விக்குறியாகும் மின் உற்பத்தி திட்டங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Power Generation Projects In Sri Lanka

இந்த நிலைமையின் கீழ் அதானி மாத்திரமின்றி சகல சர்வதேச முதலீட்டாளர்களும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த காலங்களில் மன்னார் காற்றலை மின்உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு ஏனைய முதலீட்டாளர்களும் சிந்திப்பர்'' என கூறியுள்ளார்.   

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW