காலநிலை மாற்றம்! பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Ministry of Education Sri Lankan Peoples Climate Change School Incident School Children
By Rakshana MA Feb 16, 2025 05:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக இலங்கை கல்வி அமைச்சினால்(Ministry of Education) பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாளைய தினம்(17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

தேவையான அறிவுறுத்தல்கள் 

தேவையேற்படின் பாடசாலை அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காலநிலை மாற்றம்! பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Climate Change Warning To School Students

பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்க வேண்டும். என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உட்பட உலகின் மத்திய ரேகை பகுதியில் உள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுகிறது.

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை

வெப்பநிலை மாற்றம் 

அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம்! பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Climate Change Warning To School Students

அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையினால் உடல் வெப்பநிலை அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவில் நீர் அல்லது இயற்கை பானங்களை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW