இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

Sri Lanka Tourism Tourism
By Rukshy Feb 15, 2025 12:25 PM GMT
Rukshy

Rukshy

2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 367,804 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 59,391 ஆகும்.

இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள் | Tourists Flocking In Their Millions Sri Lanka

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 48,411 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 34,655 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 23,280 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 22,670 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 20,078 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 13,799 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW