வாழைச்சேனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Fire
By Rakshana MA Feb 01, 2025 05:09 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்ணோடை கொண்டயன்கேணி பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் மர வேலைத்தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

எனினும், அதிகாலை வேளை ஏற்பட்ட இந்த தீயை அயலவர்களின் உதவியுடன் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தாலும், வேலைத்தளத்திலுள்ள பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள், மரத்தளபாடங்கள், மர குற்றிகள் என்பன தீயில் கருகியுள்ளன.

இன்றைய வானிலை மாற்றம்

இன்றைய வானிலை மாற்றம்

ஏற்பட்டுள்ள நட்டம் 

இதனால் அறுபது இலட்சம் ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பீட்டு அறிக்கை உரிய அதிகாரிகள் ஊடாக பெறப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாழைச்சேனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து | Sudden Fire Accident In Valaichenai

மேலும், இந்த தீச்சம்பவத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

காணாமல் போன சிறுவனை தேடி பொலிஸார் தீவிர விசாரணை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

காணாமல் போன சிறுவனை தேடி பொலிஸார் தீவிர விசாரணை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery