காணாமல் போன சிறுவனை தேடி பொலிஸார் தீவிர விசாரணை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
கடந்த ஜனவரி 2ஆம் திகதி காணாமல் போன 15 வயர் சிறுவன் ஜேசான் முஹம்மட்டை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சிறுவனின் தயாரினால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் படி, இந்த விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் அடையாளங்கள்
மேலும், களுத்துறை தெற்கு, மஃபூர் கிரசண்ட், எண். 121/05A இல் வசிக்கும் ஜேசான் முஹம்மட், தோராயமாக 5 அடி உயரம், மெலிந்த உடல், நீண்ட முகம், நெருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர்.
அத்துடன், சிறுவன் காணாமல் போன நேரத்தில், வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை கால்சட்டை அணிந்திருந்தார்.
அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071-8591691 என்ற எண்ணில் அல்லது களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 034-222222 / 034-222223 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்க முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |