சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

Eastern Province Kalmunai Sports
By Rakshana MA May 17, 2025 01:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

2025 ஆம் ஆண்டுக்கான சாய்ந்தமருது கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் கல்முனை சாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

குறித்த விளையாட்டு போட்டியானது, சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் பங்குபற்றிய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் 16 முதலாமிடங்கள், 14 இரண்டாமிடங்கள்,18 மூன்றாம் இடங்கள் அடங்கலாக மொத்தமாக 48 வெற்றியிடங்களப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்

புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்

கோட்டமட்ட போட்டி 

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீம் தலைமையில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக் ஆகியோர்களின் அயராத பெரு முயற்சியினால் மாணவர்கள் இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்டுகிறது.

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை | Success In District Level Sports Competition

இந்நிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பயிற்றுவித்த ஆசான்களுக்கும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஏனைய ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அதேவேளை, மேற்படி போட்டிகளில் 1ஆம்,2ஆம் இடங்களைப் பெற்றவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள வலயமட்ட போட்டிகளில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

புத்தளத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தய கணவன் கைது

புத்தளத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தய கணவன் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery