சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Risad Badhiutheen Saudi Arabia Eastern Province
By H. A. Roshan May 17, 2025 07:00 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் நேற்றை தினம் (16) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ரிஷாட் தெரிவிக்கையில், "இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் ஒரு சுமூகமான மற்றும் பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

தொடருந்து சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

தொடருந்து சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

விசேட கலந்துரையாடல்

இதன்போது பல்வேறுபட்ட சமகால பிரச்சினைகள் குறித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம்.

சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் | Risad And Saudi Arabian Ambassador Meeting

மேலும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தோம்.

இதேவேளை, தூதுவரின் அன்பான விருந்தோம்பலையும், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான அவரது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடொன்றில் முக்கிய பதவி

முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடொன்றில் முக்கிய பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW