போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு

By Rakshana MA Jun 30, 2025 08:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - சம்மாந்துறையில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த இந்த நிகழ்வானது, இன்றைய தினம் (30) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விழிப்புணர்வு செயற்றிட்டம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர் தலைமையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயகத் ஆகியோரால் போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு | Student Drug Awareness Sammanthurai

அத்துடன் குறித்த நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சம்மாந்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை அழிப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.இக்ராம், ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மாணவர்களின் பாடசாலை அனுமதி குறித்து வெளியாகும் புதிய சுற்றறிக்கை

மாணவர்களின் பாடசாலை அனுமதி குறித்து வெளியாகும் புதிய சுற்றறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery