அம்பாறையில் தொடரும் கட்டாக்காலி மாடுகளின் தொந்தரவுகள்

Sri Lanka Police Ampara Sri Lanka
By Rakshana MA Jul 01, 2025 05:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் பகல் இரவு பாராது ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.

இந்த பகுதியிலுள்ள அரச தனியார் நிறுவனங்களிற்கு முன்பாக மாடுகள் தினமும் சஞ்சாரம் செய்வதுடன் அந்தப்பகுதிகளை சுகாதார சீர்கேடான இடங்களாக மாற்றுவதுடன் அந்தப்பகுதியில் துர்நாற்றமும் ஏற்படுகின்றது.

மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

ஏற்படும் சேதங்கள் 

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை ,கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை பிரதான பேருந்து தரிப்பிடம், இலங்கை மின்சார சபை, கல்முனை பிரதேச செயலகம், வங்கிகள், உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகள் நாய்கள் நடமாடுவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. 

அம்பாறையில் தொடரும் கட்டாக்காலி மாடுகளின் தொந்தரவுகள் | Stray Cattle Problem In Kalmunai Town

வீதிகளில் இரவு வேளையில் நடமாடித்திரியும் சுமார் 25 இற்கும் மேற்பட்ட கறுப்பு, வெள்ளை , மஞ்சள் வர்ணம் கொண்ட கட்டாக்காலி மாடுகள் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிகின்றன.

இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.

இவ்வாறான கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல் விபத்துக்களை குறைக்கும் வகையிலும் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸார் முன்னெடுத்த போதிலும் தற்போது இவ்வாறு மேற்கொள்ளாமையினால் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் மாடுகள் படுத்துறங்குவது நிற்பது போன்றவற்றினால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிண்ணியாவில் அழுகிய இளநீர் விற்பனை.. அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவினர்

கிண்ணியாவில் அழுகிய இளநீர் விற்பனை.. அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவினர்

நடவடிக்கைகள்

மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகின்ற இவ்வாறான கட்டாகாலி மாடுகளை கல்முனை மாநகர சபை அதிகாரங்களைக் கொண்டு ஏன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அம்பாறையில் தொடரும் கட்டாக்காலி மாடுகளின் தொந்தரவுகள் | Stray Cattle Problem In Kalmunai Town

மாநகர சபையினால் கடந்த காலங்களிவ் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததை போன்று எதிர்காலத்தில் பிடித்து கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery