தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
திருகோணமலை (Trincomalee) - தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலான அல்-குர்ஆன் மனன போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
எம்.எம்.அப்துல்லாஹ், என்.எம்.ஹஸ்ஸான் ஆகிய மாணவர்களே, இவ்வாறு தேசிய மட்டத்தில் 2ஆம் மற்றும் 5ஆம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த அம்மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வானது, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மத்ரஸா நிருவாகத்தினர் இணைந்து இன்று (28) காலை கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது.
கௌரவிப்பு நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வில் பொன்னாடையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், இம்மாணவர்களுக்கு அல்குர்ஆன் போதித்து கொடுத்த மௌலவிமார்கள், தோப்பூரிலுள்ள இரண்டு முப்தி பட்டம் பெற்ற உலமாக்கள், மர்ஸா நிருவாகத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாற, மூதூர் பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஆர்.எம்.நிம்சாத்,தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர், நிருவாகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










