இம்முறை இலவசமாக ஹஜ் செய்யவுள்ள 20 கிழக்கிலங்கை மக்கள்..!
Saudi Arabia
Mosque
By Rakshana MA
இலங்கையிலிருந்து இம்முறை 20 பேர் இலவசமாக ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சவூதி அரேபிய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் அழைப்பின் பேரில் செல்லவுள்ளனர்.
இலவச ஹஜ் பயணம்
இதன்போது இலவச ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நிகழ்வு நேற்று (26) கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் இடம் பெற்றது.
அதேவேளை, குறித்த தெரிவில் சம்மாந்துறை ஊடக மையத்தின் ஆலோசகர் அரச சட்டத்தரணி எம்.ஏ.எம்.லாபீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |