இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் பெறுமதி மாற்றம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 213.53 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 317.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 304.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 381.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 192.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 182.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 226.56 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 216.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.91 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
வர்த்தக வங்கிகளில் நிலவரம்
இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (05) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.295 ஆகவும், விற்பனை விலை ரூ.303.75 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி ரூ.293.46 ஆகவும், ரூ.303.99 ஆகவும் பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.294.19 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 303.75 ஆகவும் காணப்படுகிறது.
மேலும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.294.5 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.302.5 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |