பல கொள்ளைச் சம்பவங்கள்: சம்மாந்துறையில் கைதான மூவர்
அம்பாறை(Ampara) மாவட்டத்தில் பல்வேறு கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் வீட்டினை உடைத்து தொலைபேசி மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் கடந்த திங்கட்கிழமை(03) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலதின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முறைப்பாடு
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும், வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மலையடிக் கிராமம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, கடந்த 26ஆம் திகதி இரவு வேளையில் மையவாடி பகுதியில் வயதான பெண்மணியின் வீட்டில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடித்தும் தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபர்கள் இருவரும் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தகவல் அறிந்த வயதான பெண், நேற்று(04) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி வீட்டில் இரவு வேளையில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடித்ததாக முறைப்பாடு செய்தார்.
பொலிஸார் நடவடிக்கை
முறைப்பாடு தொடர்பில் வயதான பெண்மணியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், "பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் கொலை செய்வேன்” என்று அச்சுறுத்தியதாக வயதான பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் கொள்ளையடித்த நகைகளையும் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |