நாளுக்கு நாள் அதிகரிக்கும் சஜித்தின் வெற்றிக்கான நிலைப்பாடு

Batticaloa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 06, 2024 07:36 AM GMT
Laksi

Laksi

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றி அலைக்கான நிலைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம் சுபைர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

சஜித்தின் வெற்றி

மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள மூவின மக்களும் எதிர்க்கட்சித் தலைவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் பணிகளை எமது கட்சியுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சஜித்தின் வெற்றிக்கான நிலைப்பாடு | Sri Lanka Presidential Election Sajith

மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவரது வெற்றியை உறுதி செய்ய இங்குள்ள அரசியல் தலைமைகளுடன் ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நாம் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக மாவட்டத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று வரும் வேலை அவரது வெற்றி அலைக்கான நிலைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

உள்ளூராட்சி சபை தேர்தல்

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்து ஜனாதிபதி வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்கவை எவ்வாறு ஆதரிப்பது என்று மக்கள் மத்தியில் ஒரு கேள்வி உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சஜித்தின் வெற்றிக்கான நிலைப்பாடு | Sri Lanka Presidential Election Sajith

மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளதுடன் நீண்ட நாட்களாக இடம்பெறாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலை முன்னெடுத்து. உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற வேண்டுமென இங்குள்ள மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதனை நிறைவேற்ற சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பின்னர் இவைகளை இடம்பெறச் செய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW