ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 06, 2024 04:21 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக்கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்புகளின்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டக்கூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் | Election In Sri Lanka

வன்முறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு

இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம்.

அத்துடன் வட்ஸப் குழுமங்களிலும், பேஸ்புக் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான காணொளிப் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் | Election In Sri Lanka

அதேபோன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை வன்முறையாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW